பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு ரூ.6½ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன கலெக்டர் நந்தகுமார் தகவல்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழக அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள், மாணவ–மாணவிகள் 28,766 பேருக்கு ரூ.6 கோடியே 52 லட்ச

Update: 2016-12-31 22:29 GMT

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள், மாணவ–மாணவிகள் 28,766 பேருக்கு ரூ.6 கோடியே 52 லட்சத்து 933 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த 7,125 மாணவர்களுக்கும், 8,149 மாணவிகளுக்கும் ரூ.5 கோடியே 3 லட்சத்து 20 ஆயிரத்து 730 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த 551 நபர்களுக்கு ரூ.19 லட்சத்து 22 ஆயிரத்து 462 மதிப்பீட்டில் விலையில்லா தையல் எந்திரங்களும், 291 நபர்களுக்கு ரூ.9 லட்சத்து 4 ஆயிரத்து 741 மதிப்பீட்டில் விலையில்லா சலவைப்பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. 10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 48 மாணவ, மாணவிகளுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 32 மாணவ, மாணவிகளுக்கும் தலைசிறந்த பள்ளியில் சேர்ந்து படிக்க ரூ.22 லட்சத்து 20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்