நெற்பயிர்கள் கருகியதால் பெண், வி‌ஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை

நெற்பயிர்கள் கருகியதால் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தண்ணீர் இன்றி... நடப்பு ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் கடலூர் மாவட்டத்தில் பெருமளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கருகிய பயிர்களால் விவசாயிகள் மரணம் தொடர் கதையாகி வருகிறது. அந்த வ

Update: 2017-01-07 22:30 GMT

சிதம்பரம்,

நெற்பயிர்கள் கருகியதால் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தண்ணீர் இன்றி...

நடப்பு ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் கடலூர் மாவட்டத்தில் பெருமளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கருகிய பயிர்களால் விவசாயிகள் மரணம் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், புவனகிரி அருகே பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதன்விவரம் வருமாறு:–

புவனகிரி அருகே தென்கிருஷ்ணாபுரம் தெற்குதெருவை சேர்ந்தவர் நல்லதம்பி மனைவி சுசீலா (வயது 63). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் நெற்பயிரிட்டு இருந்தார். ஆனால், நடப்பு ஆண்டு போதிய அளவு மழை இல்லாததால் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி சுசீலாவின் நிலத்தில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகின.

இதனால் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் அவர் வீட்டில் இருந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று சுசீலா வி‌ஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்