தூய்மை பாரதம் திட்டம் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

தூய்மை பாரதம் திட்டம் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

Update: 2017-01-08 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தூய்மை பாரதம் திட்ட விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 1,500 பேர் கலந்து கொண்டனர்.

மினிமாரத்தான் போட்டி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் தூய்மை பாரதம் திட்டம் குறித்த விழிப்புணர்வு மினிமாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. பழைய துறைமுகம் அருகே இருந்து தொடங்கிய போட்டியை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஆனந்த சந்திரபோஸ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கு தனித்தனி பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருந்து சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர்.

பரிசளிப்பு விழா

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா துறைமுக பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவில் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஆனந்தசந்திரபோஸ், துணைத்தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினர்கள் செல்வராஜ், பொன்வெங்கடேஷ், துறைமுக செயலாளர் மோகன், போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், நிதி ஆலோசகர் மற்றும் உயர் கணக்கு அதிகாரி சாந்தி, கங்காதேவி, தலைமை என்ஜினீயர் சுரேஷ், முதுநிலை துணை போக்கவரத்து மேலாளர் எடிசன், துணை பாதுகாப்பாளர் செந்தில்குமார், துணை கமாண்டன்ட் பாபாதோஷ் சந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்