ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் லேசர் சிகிச்சை பற்றிய கருத்தரங்கு

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் லேசர் சிகிச்சை பற்றிய கருத்தரங்கு

Update: 2017-01-08 22:30 GMT
நாகர்கோவில்,

இந்திய தோல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் தோல்நோய் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய சருமப் பிரச்சினைகளுக்கு லேசர் சிகிச்சை பற்றி தேசிய அளவிலான கருத்தரங்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. கருத்தரங்குக்கு கல்லூரி டீன் டாக்டர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பிரவீன் பேசினார்.

இதில் தோல் மருத்துவர்கள் மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு டாக்டர்கள் நிர்மலாதேவி, செல்வம், சஞ்சீவ், டேவிட் ஆகியோர் லேசர் சிகிச்சை முறை குறித்து பயிற்சி அளித்தார்கள்.

மேலும் செய்திகள்