குளத்து நீரை குடிநீராக்கும் வடிகட்டி

சூரிய சக்தியின் மூலம் உப்புநீரை குடிநீராக்கும் நுட்பம் ஏற்கனவே இருக்கிறது.

Update: 2017-02-06 09:58 GMT
சூரிய சக்தியின் மூலம் உப்புநீரை குடிநீராக்கும் நுட்பம் ஏற்கனவே இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டும் வருகிறது. வீடுகளிலும் இதே நுட்பத்தில் தண்ணீரை வடிகட்டிப் பயன்படுத்த முடியும். அதற்கான உபகரணங்கள் அதிக விலையுடையதாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கின்றன.

தற்போது சிறிய அளவில் வீடுகளில் பயன்படுத்தும் சூரியசக்தி வடிகட்டி கருவி வந்துள்ளது. முன்புள்ள கருவிகளைவிட 2 மடங்கிற்கு மேலாக குடிநீரை சுத்திகரித்து வழங்கவல்லது இந்தக்கருவி. சீனாவின் பபல்லோ பல்கலைக்கழகம் மற்றும் புடான் பல்கலைக்கழகம், விஸ்சான்சன் மாடிசன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த கருவியை வடிவமைத்துள்ளன. எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை தீர்க்க, உவர் நீர் மற்றும் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் அவசியம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோன்ற காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் சூரியசக்தி குடிநீர் வடிகட்டி இருக்கும் என்று நம்பலாம்!

மேலும் செய்திகள்