ராணிப்பேட்டையில் சீமைக்கருவேலை மரங்களை ஒழிக்க கோரி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

ராணிப்பேட்டை பெல் பகுதியில் உள்ள கிராமங்களில் சீமைக் கருவேலை மரங்களை ஒழிக்க கோரி

Update: 2017-02-06 23:00 GMT

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை பெல் பகுதியில் உள்ள கிராமங்களில் சீமைக் கருவேலை மரங்களை ஒழிக்க கோரி, பெல் இயற்கையின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. சைக்கிள் ஊர்வலத்தை பெல் நிறுவன கூடுதல் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்ல அறக்கட்டளை தலைவர் ஜெ.லட்சுமணன், சிப்காட் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சைக்கிள் ஊர்வலம் பெல் அருகில் இருந்து புறப்பட்டு நரசிங்கபுரம், சீக்கராஜபுரம், மோட்டூர், நாமக்குளமோட்டூர், தக்காம்பாளையம், ஏகாம்பரநல்லூர், நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, அக்ராவரம், சிப்காட், புளியந்தாங்கல் வழியாக வந்து பெல் அருகில் நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் சென்றவர்கள் சீமைக்கருவேல மரங்களால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியும், ஒலிபெருக்கி மூலம் விளக்கியும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

இதில் பெல் இயற்கையின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த கெங்காதரன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்