தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க கோரிக்கை

தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க கோரிக்கை

Update: 2017-02-06 20:20 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் சிற்றரசன் (வயது 39). விவசாயியான இவர் தோட்டத்தில் பயிரிட்டிருந்த பயிர்கள் கருகியதால் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி சிற்றரசனின் குடும்பத்தினரை விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட தலைவர் மணிவேல் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட விவசாயி சிற்றரசனின் குடும்பத்துக்கு அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். சிற்றரசனின் மனைவி மாலதிக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். அவரது பெண் குழந்தைகள் இருவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்றனர். அப்போது விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்