வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் காயம்

வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் காயம்;

Update:2017-02-08 03:06 IST
தர்மபுரி,

பெங்களூருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38). இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் ஈரோடு அருகே உள்ள கொடுமுடிக்கு வேனில் சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் பெங்களூருவிற்கு புறப்பட்டனர். இவர்கள் வந்த வேன் தொப்பூர் டோல்கேட் அருகே நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் விஜயகுமார், அவருடைய மனைவி அம்முலு(30) உறவினர்கள் சத்யா, ராமசாமி உள்பட 7 பேர் காயமடைந்தனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்