விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்ளிருப்பு போராட்டம்

விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்ளிருப்பு போராட்டம்;

Update:2017-03-01 03:45 IST
களியக்காவிளை,


முதியோர் பென்சன் தொகை வழங்குவதில் குளறுபடி நடந்து வருவதாகவும், காலதாமதம் செய்வதாகவும் புகார் வந்தது. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். அவருடன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் லாரன்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தவறுகள் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை எனில் அடுத்த கட்டமாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நலவாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்