அருர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

அரூர் அருகே உள்ள கொடமாண்டப்பட்டியை சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி குமுதா (வயது 56).;

Update:2017-03-11 04:15 IST

அரூர்,

அரூர் அருகே உள்ள கொடமாண்டப்பட்டியை சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி குமுதா (வயது 56). இவர் ஈச்சம்பாடி சாலையில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் இருந்து வீட்டுக்கு சென்ற போது கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. அப்போது பீரோவில் பார்த்த போது உள்ளே இருந்த 5 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்