மும்பையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update:2017-03-11 04:33 IST

மும்பை

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி சார்பில் மும்பை ஆசாத் மைதானத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பொன் இனவாழவன், கென்னடி, கனகமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அந்தோணி ஜார்ஜ், மும்பை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் அமரன், மோகன், மருகன் அருண், சமரன் வெங்கடேஷ், டோமினிக், வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழனி முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் இலங்கை கடற்படையினரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். மேலும் இந்த விவகாரத்தில் மத்தியஅரசுக்கு அழுத்தம் தர வேண்டி முதல்–மந்திரி அலுவலகம் சென்று மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்