அரசு ஊழியர்களுக்கான மாநில கைப்பந்து போட்டி: தஞ்சை அணி சாம்பியன்

அரசு ஊழியர்களுக்கான மாநில கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் தஞ்சை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Update: 2017-04-02 22:45 GMT
தஞ்சாவூர்,

அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 27 மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதன் தொடக்க விழாவில் மாவட்ட விளையாட்டு அதிகாரி பாபு வரவேற்றார். வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் முன்னிலை வகித்தார். போட்டிகளை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தொடங்கி வைத்தார்.

தஞ்சை அணி முதலிடம்

இதில் ஆண்கள் பிரிவில் நீலகிரி அணி முதலிடமும், நாகை அணி 2-ம் இடமும் பிடித்தது. பெண்கள் பிரிவில் தஞ்சை அணி முதலிடமும், புதுக்கோட்டை அணி 2-ம் இடமும் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் கீதாஞ்சலிரத்னமாலா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். இதில் மாவட்ட விளையாட்டு அதிகாரி பாபு, அரசுத்துறை அலுவலர்கள், விளையாட்டு பயிற்றுனர்கள், பணியாளர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கைப்பந்து பயிற்றுனர் மகேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்