சேத்தூர் எக்கலாதேவி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம் அருகே சேத்தூர் எக்கலாதேவி அம்மன் கோவில்;

Update:2017-04-11 00:45 IST
ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சேத்தூர் எக்கலாதேவி அம்மன் கோவில் பங்குனி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள், தேவதானம் நச்சாடை தவிர்ததருளிய சாமி கோவில் பரம்பரை அறங்காவலர் சேத்தூர் ஜமீன்தார் துரைராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. 18-ந் தேதி் பக்தர்கள் காப்பு கட்டி தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாட்டினை தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் சக்திவேல்தேவர், செயலாளர் சண்முகநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்