உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை;

Update:2017-04-20 04:30 IST

உத்தமபாளையம்,

டெல்லியில், 35 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

 போராட்டத்திற்கு, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க தலைவர் தர்வேஷ் மைதீன் தலைமை தாங்கினார். செயலாளர் சகுபர்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் முடிவில் உத்தமபாளையம் துணை தாசில்தார் முருகேசனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

மேலும் செய்திகள்