டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வதை மீட்க வேண்டியும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தொடர் போராட்டம்.

Update: 2017-05-05 23:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வதை மீட்க வேண்டியும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டம் நடந்து வந்தது.

 இந்த நிலையில் நேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆஸ்பத்திரி முன்பு அரசு டாக்டர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் பிரபு சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் சந்திரன், விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் அருள் டேனியல் மற்றும் பலர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்