வேலூர் மத்திய சிறை காவலர் பணியிடை நீக்கம்

திருப்பத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காலேஜ்மேடு பகுதியில் கும்பலாக இருந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்

Update: 2017-05-06 23:50 GMT

வேலூர்,

திருப்பத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காலேஜ்மேடு பகுதியில் கும்பலாக இருந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், மங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 28), கவியரசு (27), சி.கே.சி. நகர் முகேஷ் (21), காமராஜ் நகர் சுரேந்திரன் (21), பிரசாத் (20) மாது (21) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வழிபறியில் ஈடுபட சதித்திட்டம் திட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதில் பிரபாகரன் என்பவர் வேலூர் மத்திய சிறையில் 2–ம் நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருப்பதாக தெரிகிறது. இந்தநிலையில் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் சண்முகம், 2–ம் நிலை காவலர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்