தட்டார்மடம் அருகே கருமேனி ஆற்றுப்படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்ட அதிகாரிகள் ஆய்வு

தட்டார்மடம் அருகே கருமேனி ஆற்றுப்படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2017-05-31 21:15 GMT
தட்டார்மடம்,

தட்டார்மடம் அருகே கருமேனி ஆற்றுப்படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள மணிநகர் கருமேனி ஆற்றுப்படுகையில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு உள்ளதா? என்பதை கண்டறிய ஹைட்ரோ கார்பன் திட்ட அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களுடன் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு) நிறுவன அதிகாரிகள், புவியியல் வல்லுனர்களும் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

மணிநகர் கருமேனி ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலத்தின் அருகில் அதிகாரிகள் அளவீடு செய்தனர். பின்னர் செயற்கைகோள் வரைபடம் மூலம் இயற்கை எரிவாயு உள்ள பகுதியை அடையாளம் காணும் வகையில், அங்கு அடையாள கல் நட்டிச் சென்றனர்.

இதற்கிடையே மணிநகரில் இயற்கை எரிவாயு கண்டறியும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் குணசீலன் தலைமையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு நடப்பட்டு இருந்த அடையாள கல்லை பிடுங்கி அப்புறப்படுத்தினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்