முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை: மாணவர் சங்கத்தினர் கைது

அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளிகளில்

Update: 2017-06-15 22:45 GMT

மதுரை,

அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளிகளில் நூலகம், ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு, இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வா, மாவட்ட தலைவர் வேலுதேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் மாவட்ட செயலாளர் செல்வா உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்