தற்காப்பு ஆயுதம்

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைதான் தாய்ப் பறவை உணவூட்டும். அதனால் தாயின் தயவை எதிர்பார்க்காமல், தானே உணவு தேடிக் கிளம்பிவிடுகிறது குஞ்சு.

Update: 2017-06-16 10:01 GMT
மேசானில் வாழும் சினேரியோஸ் மொர்னர் என்ற பறவையின் குஞ்சு தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்கிறது. முட்டையில் இருந்து வந்தவுடன் குஞ்சின் உடல் முழுவதும், கம்பளிப் பூச்சியைப் போல கூர்மையான, வி‌ஷமுடைய முட்கள் ஆரஞ்சு வண்ணத்தில் நீட்டிக்கொண்டிருக்கின்றன. நிறத்தையும் முட்களையும் பார்க்கும் எதிரி, குஞ்சின் அருகே வர நினைக்காது.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைதான் தாய்ப் பறவை உணவூட்டும். அதனால் தாயின் தயவை எதிர்பார்க்காமல், தானே உணவு தேடிக் கிளம்பிவிடுகிறது குஞ்சு. பறக்கும் அளவுக்குச் சக்தி இருக்காததால், எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு இயற்கை இப்படி ஒரு பாதுகாப்பை குஞ்சுக்கு அளித்திருக்கிறது. முதிர்ச்சியடைந்தவுடன் ஆரஞ்சு வண்ண முட்கள் காணாமல் போய்விடுகின்றன என்பதுதான் இயற்கையின் அதிசயம்.

மேலும் செய்திகள்