கடனாக கிடைக்கும் மதிப்பெண்கள்!

ஒரு மதிப்பெண்ணில் தோல்வியடைபவரும் 10 மதிப்பெண்களில் தோல்வியடைபவரும் இந்த வங்கியில் மதிப்பெண்களைக் கடன் பெற்று, தேறிவிட முடியும்.

Update: 2017-06-16 10:05 GMT
சீனாவின் நான்ஜிங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்காக ‘மதிப்பெண் வங்கி’ ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வங்கியில் மாணவர்கள் மதிப்பெண்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். அடுத்து வரக்கூடிய தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று, கடனைத் திருப்பியடைத்துவிட வேண்டும். 

‘இந்த மதிப்பெண் வங்கி மாணவர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஒரு மதிப்பெண்ணில் தோல்வியடைபவரும் 10 மதிப்பெண்களில் தோல்வியடைபவரும் இந்த வங்கியில் மதிப்பெண்களைக் கடன் பெற்று, தேறிவிட முடியும். ஆனால் அடுத்து வரக்கூடிய தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, வட்டியுடன் சேர்த்து வங்கிக்குத் திருப்பியளித்துவிட வேண்டும். பத்தாம் வகுப்பில் 49 மாணவர்களில் 13 மாணவர்கள் வங்கியில் இருந்து மதிப்பெண்களைக் கடனாகப் பெற்றிருக்கிறார்கள். இது பரிசோதனை முயற்சிதான். ஆனாலும் நல்ல பலனைத் தருகிறது’ என்கிறார் பள்ளியின் இயக்குநர் கான் ஹுவாங். மதிப்பெண் வங்கிக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் பலரும் எதிர்க்கின்றனர். இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்