கபிலர்மலை அருகே கோழி திருடிய 2 பேர் கைது கையும், களவுமாக பிடிபட்டனர்
கபிலர்மலை அருகே, கோழி திருடிய 2 பேரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.;
பரமத்தி வேலூர்,
கபிலர்மலை அருகே உள்ள செம்மலை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். நேற்று காலை இவர் வெளியில் சென்று விட்டு சுமார் 8 மணியளவில் மீண்டும் தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது இவருக்கு சொந்தமான 2 கோழிகளை 2 பேர் பிடித்தபடி வந்து கொண்டு இருந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். இதைக்கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தப்பி ஓட முயன்ற கோழி திருடிய அந்த 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
2 பேர் கைதுஇதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 2 பேரும் பரமத்தி அருகே உள்ள சேலூர் செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் நல்லுசாமி மகன் ஸ்ரீதர் (22), சண்முகம் மகன் சரவணகுமார் (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரும் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.