மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Update: 2017-06-25 22:45 GMT
மண்ணச்சநல்லூர்,

மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் திருவாசி என்ற கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி நிரந்தரமாக அந்த மணல் குவாரியை மூடக்கோரி நேற்று காலை 10 மணியளவில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்த மணல் குவாரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மணல் குவாரிக்கு செல்லும் பாதையில் உள்ள இரும்பு தடுப்பு கம்பிக்கு பூட்டு போட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குவாரியில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த லாரிகள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்