ஜூகு கடலில் அலையில் சிக்கி வாலிபர் பலி இன்னொருவரை தேடும் பணி தீவிரம்

ஜூகு கடலில் அலையில் சிக்கி வாலிபர் பலியானார். இன்னொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2017-06-25 22:27 GMT

மும்பை,

ஜூகு கடலில் அலையில் சிக்கி வாலிபர் பலியானார். இன்னொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பிணமாக மீட்பு

மும்பையில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதை பொருட்படுத்தாமல் பிற்பகல் 3.30 மணியளவில் ஜூகு கடலில் இறங்கி 2 வாலிபர்கள் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை வாலிபர்கள் இருவரையும் வாரி சுருட்டி உள்ளே இழுத்து சென்றது. இதில், சிக்கி இருவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உயிர்காக்கும் வீரர்கள் போராடியும் அவர்களை மீட்க முடியவில்லை.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஒருவரை மட்டும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

தேடும் பணி

தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்த வாலிபரின் பெயர் அபிஷேக் மடப்(வயது22) என்பதும், கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டவர் பெயர் அங்குர் பேட்கர்(17) என்பதும் தெரியவந்தது.

கடலில் மூழ்கிய அவரது நிலைமை என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரமாக நடந்தது.

மேலும் செய்திகள்