பயிர் காப்பீட்டு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் சேர வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

நெல்லை மாவட்டத்தில் 2017–2018–ம் ஆண்டுக்கான பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2017-07-26 20:30 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் 2017–2018–ம் ஆண்டுக்கான பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பிற்கு மகசூல் அடிப்படையில் இழப்பீடு கணக்கீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்களில் செயல்பட்டு வரும் பொது சேவை மையங்களில் காப்பீட்டு தொகையினை செலுத்தி இணைந்து கொள்ளலாம். பொது சேவை மையங்கள் அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

இந்த ஆண்டிற்கு நெல் பயிருக்கான சாகுபடி செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.23 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே நெல் நடவு செய்த விவசாயிகள் தக்க ஆவணங்களுடன் காப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.470 செலுத்த வேண்டும். இதற்கான கடைசி நாள் வருகிற 31–ந்தேதியாகும்.

இந்த தகவலை, கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்