கார்கில் வெற்றி தினத்தையொட்டி போர் நினைவு சின்னத்தில் மலர் தூவி மரியாதை

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது.

Update: 2017-07-26 23:00 GMT
சென்னை,

அந்த நாட்டு ராணுவத்துடன் இந்திய ராணுவத்தினர் போரிட்டனர். சுமார் 60 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி இந்தியா வெற்றி பெற்றது. எனினும் இந்த போரில் ஏராளமான இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். போரில் உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், வெற்றியை வீரர்களுக்கு சமர்ப்பிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந்தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்தவகையில் சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள போர் நினைவு சின்னத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தென்பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி ஆர்.கே. ஆனந்த், கிழக்கு பிராந்திய கடலோர காவல்படை ஐ.ஜி., ராஜன் பர்கோத்ரா, ஐ.என்.எஸ். அடையாறு தலைமை அதிகாரி கேப்டன் சுரேஷ் உள்ளிட்ட முப்படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள், கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்