இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

நெல்லை மாவட்டத்தில் இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

Update: 2017-08-12 21:00 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்டத்தில் இலவச வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்டு மற்றும் அக்டோபர் மாதத்தில் தலா ஒரு பஞ்சாயத்தில் கறவை பசுக்கள் மற்றும் தலா 16 பஞ்சாயத்துகளில் செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 19 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகள் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்.

தகுதியான நபர்கள்

கிராம சபை கூட்டம் நடத்தி அரசு விதிமுறைகளின் முழுமையாக கடைபிடித்து தகுதியான நபர்களை தேர்வு செய்திட வேண்டும். தேர்வுகள் வெளிப்படை தன்மையுடன், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கால்நடைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கல்யாணசுந்தரம், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் குருசாமி, சங்கரகுமார், அருணாசலகனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்