கார் மோதி மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
கார் மோதி மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி;
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள ஒடப்பேரி காலனி தெருவை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 25). இவரது நண்பர் விஜய் (35). இவர்கள் இருவரும் தங்களது சொந்த வேலையாக சென்னை சென்று விட்டு தனது ஊருக்கு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை முத்துராஜா ஓட்டினார். மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி கிராமம் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் விஜய், முத்துராஜா இருவரும் படுகாயமடைந்தனர். கார் மின்கம்பத்தில் மோதியதில் அருகில் இருந்த அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயியான முத்துராமலிங்கம் என்பவர் தூங்கி கொண்டு இருந்தவர் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார். அப்போது மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் முத்துராமலிங்கம் மின்கம்பி மீது காலை வைத்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த கார் டிரைவர் முத்துராஜா, விஜய் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் முத்துராமலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.