நெல்லை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தை தமிழ்புலிகள் அமைப்பினர் முற்றுகை

கந்துவட்டிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை தமிழ் புலிகள் அமைப்பினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-16 22:45 GMT
நெல்லை,

தமிழ்புலிகள் அமைப்பு மாநில நிர்வாகி தமிழ்செல்வன் தலைமையில் கல்லிடைக்குறிச்சி, தெற்கு பாப்பாங்குளம், மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேன்களில் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அனைவரும் அலுவலகத்திற்குள் செல்லவேண்டும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்திக்கவேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு அங்கு காவல்பணியில் இருந்த போலீசார் 5 பேர் மட்டுமே செல்லமுடியும் என்றனர். இதை ஏற்க மறுத்த அவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

கந்துவட்டிகாரர்கள் மீது...


பின்னர், அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘நாங்கள் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தோம். நாங்கள் வாங்கிய தொகைக்கு மேல் அவர்கள் கந்துவட்டி வசூல் செய்துவிட்டனர். தற்போது கடன்தொகையை கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள். வட்டியை மட்டும் தாருங்கள், பணம் உங்களிடம் இருக்கட்டும் என்று கூறுகிறார்கள். மேலும் கடனுக்கு கந்துவட்டி வசூல் செய்கிறார்கள். எனவே கந்து வட்டிவாங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்