குமரி மாவட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட ரே‌ஷன்கடை ஊழியர்களுக்கு அபராதம்

முறைகேடுகளில் ஈடுபட்ட ரே‌ஷன்கடை ஊழியர்களுக்கு அபராதம் மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவு.

Update: 2017-08-25 22:30 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவுப்படி, மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் அடங்கிய குழுவினர், அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை, விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்களிலும் உள்ள ரே‌ஷன்கடைகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள வீடுகளில் போலி ரே‌ஷன்கார்டுகள் குறித்து ஒரேநேரத்தில் தணிக்கை மேற்கொண்டனர். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள ரே‌ஷன்கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். தணிக்கையின்போது, இருப்புக்குறைவு, எடைகுறைவு மற்றும் போலிப்பட்டியல் போன்ற இனங்களில் முறைகேடு செய்த ரே‌ஷன்கடை ஊழியர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரத்து 525 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்