திருப்பூரில் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்சு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் நேற்று மாநகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-09-09 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் விரோத போக்கினாலும், நிர்வாக சீர் கேட்டினாலும் 108 ஆம்புலன்சு சேவையை சீர்குலைக்கும் தனியார் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு 108 ஆம்புலன்சு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் நேற்று மாநகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன், ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். இதில் தனியார் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழியர்கள் கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்