2–வது நாளாக ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை

ராமேசுவரம் பகுதியில் 2–வது நாளாக பலத்த மழை பெய்தது.

Update: 2017-09-10 22:15 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் 2–வது நாளாக நேற்று அதிகாலை பெய்ய தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழையாக பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ராம தீர்த்தம் பகுதியில் உள்ள அரசு எஸ்.பி.ஏ.பெண்கள் எதிரில் மழை நீர் குளம்போல் தேங்கிநின்றது. இதேபோல தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

இதன்காரணமாக அப்துல்கலாம் மணி மண்டபத்தின் முன்பு தேசிய நெடுஞ் சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழைஅளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:– பாம்பனில் 41.5, தங்கச்சிமடம் 33, ராமேசுவரம் 17.2.

ராமேசுவரத்தில் மழை காலங்களில் எஸ்.பி.ஏ.பள்ளி எதிரில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அந்த பகுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்பது தொடர்ந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்