நடைபாதை வியாபாரிகளை தாக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ.

மும்பை அந்தேரி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருப்பவர் அமித் சாட்டம். இவர் நடைபாதை வியாபாரிகளை தகாத வார்த்தையால் திட்டி, காலால் எட்டி உதைத்தும் தாக்கி இருக்கிறார்.

Update: 2017-09-10 22:58 GMT

மும்பை,

மும்பை அந்தேரி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருப்பவர் அமித் சாட்டம். இவர் கடந்த 8–ந் தேதி அந்தேரி மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் பொதுஇடங்களை ஆக்கிரமித்து வியாபாரம் செய்துகொண்டிருந்த நடைபாதை வியாபாரிகளை தகாத வார்த்தையால் திட்டி, காலால் எட்டி உதைத்தும் தாக்கி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், அவர் போலீசாரை நோக்கி ஆவேசமாக உங்களுக்கு கடமையை செய்ய அரசு சம்பளம் தரவில்லையா என்றும், அவதூறாக பேசும் காட்சியும் பதிவாகி உள்ளது. ஆனால் இந்த சம்பவம் என்று நடந்தது என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக அமித் சாட்டம் மீது போலீசில் நடைபாதை வியாபாரிகள் புகார் கொடுத்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், அமித் சாட்டம் எம்.எல்.ஏ. தவறு செய்திருந்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி போலீஸ் கமி‌ஷனர் பரம்ஜித் சிங் கூறினார்.

இதுபற்றி அமித் சாட்டம் கூறுகையில், ‘‘எனது தொகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நான் துணிச்சலான நடவடிக்கை எடுப்பேன். மற்றபடி நான் எந்த தவறும் செய்யவில்லை’’ என்றார்.

மேலும் செய்திகள்