86,700 பேருக்கு மண்வள அட்டை வழங்கப்பட உள்ளது வேளாண்மை அதிகாரி தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் 86,700 பேருக்கு மண்வள அட்டை வழங்கப்பட உள்ளது என வேளாண்மை அதிகாரி மயில்வாகனன் தெரிவித்தார்.

Update: 2017-09-23 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள கமலாபுரத்தில் மண் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மயில்வாகனன் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2017-18-ம் ஆண்டில் 276 வருவாய் கிராமங்களில் 30,602 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. விவசாயிகள் 86,700 பேருக்கு மண்வள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மண் ஆய்வு செய்வதன் மூலம் நிலத்தின் களர், உவர் தன்மைக்கு ஏற்ப நிலச்சீர்திருத்தம் செய்யவும், பயிர்களின் தேவைக்கு ஏற்ப உரமிட்டு உர செலவை குறைத்து அதிக மகசூல் பெறவும் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வேளாண்மை உதவி இயக்குனர் உத்திராபதி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்