கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் பவனி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் பவனி;

Update:2017-09-24 04:00 IST
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 21–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் மாலையில் ஆன்மிக உரை, இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி போன்றவை நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் நேற்று காலையில் அபிஷேகம், அன்னதானம், மாலையில் ஆன்மிக உரை, அம்மன் பவனி வருதல் போன்றவை நடந்தன. நவராத்திரி விழா வருகிற 30–ந் தேதி வரை நடைபெறுகிறது.  

மேலும் செய்திகள்