வாக்காளர் அடையாள அட்டையில் வாலிபருக்கு பதிலாக பெண்ணின் படம்

சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் அமீனூதீன்(வயது 19). டிப்ளமோ முடித்துள்ள இவர் உறவினர் ஒருவருடைய வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

Update: 2017-09-24 00:15 GMT
சேலம்,

அமீனூதீன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தார்.

பின்னர் அவர் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்காக பலதடவை அதிகாரிகளை சந்தித்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மேற்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்று அடையாள அட்டை வந்துள்ளதா? என்று கேட்டார். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் அமீனூதீன் சொன்ன முகவரியை வைத்து வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து கொடுத்தனர்.

அப்போது அடையாள அட்டையில் தன்னுடைய புகைப்படத்திற்கு பதிலாக ஒரு பெண்ணின் புகைப்படம் மாறி இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் முகவரியில் எழுத்துப்பிழையும் இருந்துள்ளது. இதுதொடர்பாக அவர் உடனே அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், வாக்காளர் அடையாள அட்டை சென்னையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

எனவே இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுங்கள். மாற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றனர். இதையடுத்து அடையாள அட்டை கிடைத்தும் பயனில்லாமல் போய் விட்டதே என மன வருத்ததுடன் அவர் அங்கிருந்து சென்றார்.

மேலும் செய்திகள்