கோவில்பட்டி- வானரமுட்டி இடையே புதிய பஸ் சேவை அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி- வானரமுட்டி இடையே புதிய பஸ் சேவை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

Update: 2017-09-24 22:30 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் இருந்து வானரமுட்டிக்கு புதிய பஸ் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் பஸ் சேவையை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ரமேசன், பொறியாளர் ஜெயபால், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கோவில்பட்டியில் ரூ.5 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்க அனுமதியளித்து இருந்தார். அதன்படி பஸ் நிலையம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் நியாயமான முறையில் நடக்கும். எதிர்க்கட்சிகள் தேவை இல்லாத கருத்துகளை கூறி வருகின்றனர். வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணியும், ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ள இடத்தில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டும் பணியும் விரைவில் தொடங்கும் என்றார். 

மேலும் செய்திகள்