மலைப்பாதையில் மண் சரிந்தது 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வாணியம்பாடி அருகே மலைப்பாதையில் மண் சரிந்தது 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Update: 2017-10-15 22:30 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடி, ஆலங்காயம், திம்மாம்பேட்டை, அம்பலூர் வட்டார பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது.

இதேபோல் வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு செல்லும் சாலையில் உள்ள வெலதிகாமணிபெண்டா மலைப்பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக 34-வது வளைவுகளில் பெருமளவு மண்சரிந்து பாறைகள் ரோட்டில் விழுந்தது. இதனால் தமிழக - ஆந்திர எல்லை பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய், நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சென்று மண் மற்றும் பாறைகளை அகற்றினர். பின்னர் 5 மணி நேரத்திற்கு பின் வழக்கம் போல போக்குவரத்து தொடங்கியது.

மேலும் செய்திகள்