அவசர தேவைக்கான ‘பவர்பேங்க்’

வீட்டில் உள்ள பல்வேறு கருவிகள், தேவைகளுக்கும் பயன்படுத்த வந்துள்ளது பவர்பேங்க் கருவி.

Update: 2017-10-16 07:38 GMT
கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன்களை திருப்தியாக பயன்படுத்துவதற்காக கூடுதல் பேட்டரி ‘பவர்பேங்க்’ கருவியை வாங்கி வைத்துக் கொள்கிறோம். அதுபோல வீட்டில் உள்ள பல்வேறு கருவிகள், தேவைகளுக்கும் பயன்படுத்த வந்துள்ளது பவர்பேங்க் கருவி. ஜெனரேட்டர், இன்வெட்டர் போன்ற கருவிகளுக்கு மாற்றாக எளிமையாக செயல்படக்கூடியது. ஹோண்டா நிறுவனம் ஜப்பானில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ள இந்த கருவியின் பெயர் ‘லிப்-எய்டு இ500’. மடிக்கணினி, எலக்ட்ரானிக் விளக்கு உள்ளிட்ட எலக்ட்ரிக் கருவிகளுக்கு இதில் இருந்து இணைப்பு கொடுத்து சக்தி பெறலாம். எலக்ட்ரிக் கார்கள் இடையில் நின்று போனாலும் இதிலிருந்து சார்ஜ் செய்து கொள்ளலாம். எங்கும் இழுத்துச் சென்று, எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். பல்வேறு அளவுகள், தரங்களில் அதற்கேற்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது இந்த பவர்பேங்க். 

மேலும் செய்திகள்