தூத்துக்குடியில் பருவமழை மீட்பு பணி குழுவினர்களுடனான ஆய்வு கூட்டம்

தூத்துக்குடியில் பருவமழை மீட்பு பணி குழுவினர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.

Update: 2017-10-21 21:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பருவமழை மீட்பு பணி குழுவினர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மீட்புப்பணிகள் மற்றும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் மாவட்டத்தில் 36 பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள முதன்மை அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய மண்டல குழுவினர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:–

வடகிழக்கு பருவ மழையின் போது, வெள்ளம் சூழும் பகுதியில் உள்ள மக்களை தங்க வைக்கும் நிவாரண முகாம்கள், தங்குமிடங்கள் ஆகியவற்றினை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். வெள்ளம் வரும் நீர்வரத்து கால்வாய்களை வெள்ளநீர் எவ்வித தடங்கலுமின்றி செல்ல தூர்வார வேண்டும். சிறுபாலங்களை நல்லமுறையில் பராமரித்து குளங்கள் மற்றும் கண்மாய்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும். பொதுமக்களை மீட்க, படகு வசதி, நிவாரண முகாம்களுக்கு ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றார்.

யார்–யார்?

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) சேகர், உதவி கலெக்டர்கள் அனிதா, கணேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்