கல்பாக்கம் அருகே மணல் கடத்தல்; வாலிபர் கைது

கல்பாக்கத்தை அடுத்த பாலாற்றில் மணல் கடத்துவதாக சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.;

Update:2017-10-23 03:30 IST

கல்பாக்கம்,

 இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4 மணியளவில் கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே கிராமத்தை சேர்ந்த வசந்த் என்ற வசந்தகுமார் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.

மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்