ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

காட்பாடி பகுதியில் ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-11-02 22:30 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தினமும் ஆய்வுசெய்து டெங்குவை உருவாக்கும் கொசுப்புழு உற்பத்தியாக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக நேற்று காட்பாடி பகுதியில் உள்ள காந்திநகர், கழிஞ்சூர், திருநகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார். அப்போது அந்தப்பகுதியில் சில வீடுகளின் அருகில் மாடுகளை கட்டிவைத்திருந்தனர். இதன்மூலம் அங்கு கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாவது தெரியவந்தது. இதனால் அங்கிருந்த 4 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

மேலும் ரோடுகளில் மாடுகள் சுற்றித்திரிந்து சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால் ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்