திருப்பூரில் 444 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 முடித்த மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.

Update: 2017-11-02 21:28 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2016–17–ம் ஆண்டு பிளஸ்–2 முடித்த மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி வரவேற்றார். மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். இந்த விழாவில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் கலந்து கொண்டு 147 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வளர்மதி கூட்டுறவு சங்கத்தலைவர் கருணாகரன், 15 வேலம்பாளையம் கூட்டுறவு சங்கத்தலைவர் வி.கே.பி.மணி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் தேவராஜ் ஜெயின், துணைத்தலைவர் வெங்கடாச்சலம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்