தனியார் பஸ்கள் இயக்க முடியாத சூழ்நிலை: பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்

வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2017-11-03 22:15 GMT

வேலூர்,

வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் கடந்த 100 நாட்களாக டீசல் விலை 62–ம், பெட்ரோல் விலை 73–ம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் தனியார் பஸ்கள் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவை அளிக்க முடியாத நிலைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கு வரி குறைக்க வேண்டும். தினந்தோறும் விலை நிர்ணயிக்கும் அதிகாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு எடுத்துக்கொண்டு 3 மாதத்திற்கு ஒருமுறை அறிவிக்க வேண்டும்.

டீசல் விலையை குறைக்கும் முன் முதலில் வரிச்சுமைகளை குறைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக டீசல் விலை ரூ.62 ஆகும். அதில் 32 ரூபாய் வரியாகும். பாதிக்கு மேல் வரிவிதிக்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வா அவர் கூறினார்.

மேலும் செய்திகள்