நெல்லையில் பிரபல டாக்டரின் தாயாரிடம் 20 பவுன் தங்க நகை பறிப்பு 3 பேர் கைவரிசை
நெல்லையில் பிரபல டாக்டரின் தாயாரிடம் 20 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.;
நெல்லை,
நெல்லையில் பிரபல டாக்டரின் தாயாரிடம் 20 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
டாக்டரின் தாயார்
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் அய்யப்பநகர் 3–வது தெருவை சேர்ந்தவர் பொன்னம்பலவாணன். அவருடைய மனைவி காந்திமதியம்மாள் (வயது 85). இவர்களுடைய மகன் ஆவுடையப்பன், நெல்லையில் பிரபல டாக்டராக பணியாற்றி வருகிறார். டாக்டர் ஆவுடையப்பன் தனியாகவும், அவருடைய பெற்றோர்கள் தனியாகவும் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலையில் காந்திமதியம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் காந்திமதியம்மாளிடம் உங்கள் வீட்டில் கேபிள் டி.வி. சரியாக தெரிகிறதாக என்பதை பார்த்து அதை சரி செய்யவேண்டும். அதற்காக தான் வந்து உள்ளோம் என்று கூறினார்கள். உடனே அவர்களை உள்ளே வருமாறு காந்திமதியம்மாள் கூறினார்.
20 பவுன் நகை பறிப்பு
வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் காந்திமதியம்மாள் கழுத்தில் கிடந்த 20 பவுன் தங்க நகையை பறித்தனர். உடனே அவர் திருடன், திருடன் என்று கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் 3 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து காந்திமதியம்மாளிடம் 20 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள். இந்த சம்பவத்தையொட்டி நெல்லை மாநகர பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகிறவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.