அசுத்தமான தண்ணீரை குடித்த 300 பேருக்கு வயிற்றுப்போக்கு

பழங்குடியின கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து வயிற்றுப்போக்காலும், உடல்நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டனர்.;

Update:2017-11-20 04:11 IST
நாசிக்,

நாசிக் மாவட்டம் கல்வான் தாலுகாவில் தேவ்லிகாரத் என்ற பழங்குடியின கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து வயிற்றுப்போக்காலும், உடல்நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் சிலருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அசுத்தமான குடிநீரால் கிராம மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்