ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-23 22:45 GMT
திருப்பூர்,

தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் நேற்று ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். அந்த வகையில், ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதன்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு வட்டார தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) நாகேஷ் வரன் கலந்து கொண்டு பேசினார். இதில் ஊராட்சி செயலாளர்கள் செந்தில், கருணாகரன், நாகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில், இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்றும், இதை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதுபோல திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தங்கள் பணியிடத்திலேயே பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனால் ஊராட்சி பணிகள் பாதிக்கப்பட்டது.

கோர்ட்டு ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லாததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோல அவினாசி, பல்லடம், பொங்கலூர், ஊத்துக்குளி பகுதிகளில் நடந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்