சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பட்டமேற்படிப்பு பயிற்சி டாக்டர்கள் மனிதசங்கிலி போராட்டம்

சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பட்டமேற்படிப்பு பயிற்சி டாக்டர்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-30 21:45 GMT

சேலம்,

அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வினை எம்.ஆர்.பி. கலந்தாய்விற்கு முன்பாக நடத்த வேண்டும், அனைத்து காலி பணியிடங்களையும் அரசு பட்டமேற்படிப்பு கலந்தாய்வின்போது மீண்டும் காட்டிட வேண்டும், அனைத்து எம்.ஆர்.பி. வழி பணி அமர்த்தலை கட்டாய –கிராமப்புற சேவை செய்ய பணித்திட வேண்டும், இனிவரும் காலங்களில் கலந்தாய்வினை சி.எம்.எல். சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பட்டமேற்படிப்பு பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பட்டமேற்படிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 மணிநேரம் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்புள்ள வளாகத்தில் பட்ட மேற்படிப்பு பயிற்சி டாக்டர்கள் ஒன்று திரண்டு டாக்டர் சுரேஷ்குமார் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் டாக்டர்கள் செல்வராஜ், கார்த்திகேயன் உள்பட திரளான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்துக்கு ஆதரவாக அரசு டாக்டர்கள் சங்க செயலாளர் டாக்டர் செந்தில்குமார், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு சங்க மாநில துணைத்தலைவர் டாக்டர் தங்கராஜூ, செயலாளர் பாபு உள்பட அரசு டாக்டர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்