மதுக்கடை விற்பனையாளர் கொலை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

தாம்பரத்தில் மதுக்கடை விற்பனையாளர் கொலை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை செங்கல்பட்டு கோர்ட்டு உத்தவிட்டுள்ளது.

Update: 2017-12-18 22:45 GMT

செங்கல்பட்டு,

சென்னையை அடுத்த தாம்பரம் எம்.ஆர்.எம். சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 50) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடி தாலுகாவைச் சேர்ந்த சரவணன்(24) ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் 8–7–2012 அன்று கடையில் இருந்த இருவருக்கும் மதுபானம் விற்பனை செய்வதில் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், கடையில் இருந்த பீர்பாட்டிலை எடுத்து சுப்பிரமணியனின் கழுத்து பகுதியில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியன், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் மதுக்கடை விற்பனையாளரை கொலை செய்த சரவணனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்