இளவரசர் வழங்கிய கல்யாண பரிசு

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, கல்லூரி காலத்திலிருந்தே புகைப்பிடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்.;

Update:2017-12-22 13:30 IST
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, கல்லூரி காலத்திலிருந்தே புகைப்பிடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார். ஹாரி புகைப்பிடிப்பதை அவர் தந்தை சார்லஸ் விரும்பவில்லை என்றாலும், அவர் அதைத் தொடர்ந்து வந்தார். இந்நிலையில் ஹாரியின் இந்நாள் காதலியும், வருங்கால மனைவியுமான மேகன் மெர்க்கலுக்கும், ஹாரியின் புகைப்பழக்கம் பிடிக்கவில்லையாம். அதை ஹாரியிடம் நாசுக்காக சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட ஹாரி, வருங்கால மனைவிக்கு வழங்கும் கல்யாண பரிசாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியிருக்கிறார். இதனால் வருங்கால இளவரசி மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பமும் மகிழ்ந்திருக்கிறது.

மேலும் செய்திகள்