தோழிக்கு காதலர் தின வாழ்த்து அனுப்பிய 12-ம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து 2 பேருக்கு வலைவீச்சு

தோழிக்கு காதலர் தின வாழ்த்து அனுப்பிய 12-ம் வகுப்பு மாணவனை, கத்தியால் குத்திய தோழியின் அண்ணன் உள்பட 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update:2018-02-18 04:00 IST
தானே,

தோழிக்கு காதலர் தின வாழ்த்து அனுப்பிய 12-ம் வகுப்பு மாணவனை, கத்தியால் குத்திய தோழியின் அண்ணன் உள்பட 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

காதலர்தின வாழ்த்து

தானே மாவட்டம், டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் மந்தர் தெலி(வயது18). இவர் அங்குள்ள ஜூனியர் கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் தோழி ஒருவருக்கு, காதலர் தின வாழ்த்து அனுப்பி உள்ளார்.

தோழியின் செல்போனில் இருந்த அந்த வாழ்த்து செய்தியை அவளது அண்ணன் பார்த்துள்ளார். இது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

மாணவருக்கு கத்திக்குத்து

இதனால் அவர் தனது நண்பருடன் சென்று மந்தர் தெலியை சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் தன்னிடம் இருந்த கத்தியால் குத்தி உள்ளார். இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்த மந்தர் தெலியை அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் முன் போட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 12-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்